2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சில நிகழ்வுகள் பேசு பொருளாக மாறி உள்ளன..
முதலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாத்தால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறினார்.. ஒன்றுபட்ட அதிமுக என்பதே தனது நோக்கம் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.. ஓபிஎஸ் வெளியேறிய சில தினங்களில் செங்கோட்டையன் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்டது.. இதை தொடர்ந்து அதிமுக ஒன்றுபட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டார்.. கட்சி பிளவுப்பட்டிருப்பதை இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது எனவும் சசிகலா கூறியிருந்தார்..
இதை தொடர்ந்து 5-ம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்தார்.. அவர் என்ன பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் நேற்று அறிவித்தார்.. துரோகத்தின் காரணமாகவே தான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறியிருந்தார்..
இந்த சூழலில் இந்த விஷயங்களுக்கு பின்னணியில் இருப்பது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒன்றுபட்ட அதிமுகவிற்கு இபிஎஸ் ஒத்துக்கொள்ளாததால் அவருக்கு எதிராக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தரப்பு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது..
அதிமுக தலைமையை மாற்றிவிட்டு, பிரிந்த தலைவர்கள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என அனைவரையும் ஒன்று சேர்க்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.. மேலும் இபிஎஸ் இருக்கும் வரை என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறாது என நிறுவ முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது..
ஒன்றுபட்ட அதிமுகவிற்கு இபிஎஸ் தடையாக உள்ளதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கவே அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.. மேலும் இபிஎஸ் தலைமையை மாற்றினால் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் ஓபிஎஸ் – சசிகலா – டிடிவி ஆகியோர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது..
ஓபிஎஸ், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகுவதும், சசிகலா வெளியே இருந்து விலகுவதும், செங்கோட்டையை உள்ளே இருந்து போர்க்கொடி தூக்குவது என இந்த விஷயங்கள் அனைத்து இபிஎஸ்- நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் சில மூத்த அமைச்சர்களும் இபிஎஸ்-க்கு எதிராக பேசப் போவதாகவும் கூறப்படுகிறது.. எனவே அதிமுகவின் தலைமையை கைப்பற்றும் நோக்கில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது..
Read More : ‘ஆப்ரேஷன் ADMK..’ அதிமுகவை அழிக்க அஸ்திரத்தை கையில் எடுத்த திமுக.. ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான்..!!