உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியா என பொதுவாக நம்பப்படுகிறது, ஏனெனில் நம் நாட்டின் வரலாறு 10,000 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகை ஆய்வு (World Population Review) வெளியிட்ட ஒரு சர்வேயின் படி, அது உண்மையல்ல.
அந்த அறிக்கையின் படி, உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியாவுக்கு அல்ல, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் அந்த நாட்டின் நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என கூறப்பட்டுள்ளது.
அந்த சர்வே உலக மக்கள்தொகையின் வரலாற்று தரவுகளை ஆய்வு செய்து, உலகின் பழமையான நாகரிகங்களை வரிசைப்படுத்தியுள்ளது. அதன் படி, இரான் (Iran) உலகின் மிகப் பழமையான நாகரிக நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாகரிகம் எலாமைட் பேரரசு (Elamite Empire) உடன் தொடர்புடையதாகவும், அது மத்திய வெண்கல யுகத்தில் (Middle Bronze Era) இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.மு. 3200 முதல் கி.மு. 539 வரை, எலாமைட் பேரரசு தற்போதைய இரானின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்தது. அதன் நாகரிக அடையாளங்கள் இன்றும் குஜெஸ்தான் (Khuzestan) மற்றும் இலாம் மாகாணம் (Ilam Province) ஆகிய இடங்களிலும், தென் ஈராக் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
அந்த சர்வேயில், இந்தியா உலகின் இரண்டாவது பழமையான நாகரிகம், மற்றும் சீனா (China) மூன்றாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அலர்ட்.. மத்திய அரசின் புதிய விதி..



