சாலையோர உணவுக் கடையில் பெண் ஒருவர், செருப்புகளை பொறித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வேலை தேடி வெளியூர் செல்வோர்களில் சிலரது பசியை போக்க அதிகம் கை கொடுப்பது கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள். குறைந்த விலையில் வயிறு நிறைவதால் இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மசாலா மணத்துக்கு பலரும் மனம் மயங்கி விடுகின்றனர். பணக்காரர்களும் கையேந்திபவன் பக்கம் வந்தால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு விரும்பிய உணவு வகைகளை ருசித்துவிட்டு செல்கின்றனர். அந்தவகையில், சமூக ஊடகங்களில் தற்போது, செப்பல் ஸ்னாக்ஸ் என்ற உணவு வகை வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் செருப்புகளை பொறித்து விற்பனை செய்துவருகிறது. இந்த வினோதமான உணவிற்காக கூட்டம் அலைமோதுகிறது.
@truefacthindi என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ, நிஜ வீடியோ இல்லை; ஏஐ வீடியோ என்று பின்னர்தான் பலருக்கும் தெரியவந்தது. அதாவது, சமீபத்தில் ஒரு வீடியோவில் பிகினி உடையை ஃப்ரை செய்து தின்பண்டம் போல் சாப்பிடும் ஒரு வீடியோ பெரிய அளவில் பேசுப் பொருளாக மாறி இருந்தது. அதை மிஞ்சும் வகையில் தற்போது காலணியை எண்ணெய் சட்டியில் வைத்து ஃப்ரை செய்து, அதை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்கி சாப்பிடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
உணவுக் கடையில் ‘வைரல் க்ரீபி செருப்பு’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, முதலில் பார்க்கும்போது இது உண்மையான வீடியோவாக இருக்குமோ என யோசிக்கும் அளவு மிகவும் தத்துரூபமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் கூட இது உண்மையான வீடியோவா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இது ஏற்கனவே 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 120K+ லைக்குகளையும் எட்டியுள்ளது. வீடியோவில் உள்ள பின்னணி குரல் இது சீனாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது, ஆனால் இந்த ‘வறுத்த செருப்பு’ சிற்றுண்டி மலேசியாவில் தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட கிளிப் என்றும், அத்தகைய சிற்றுண்டி எங்கும் இல்லை என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும். நியூஸ் 18 இன் அறிக்கையின்படி, இவை வறுத்த பாலாடைக்கட்டிகள், செருப்பு வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, இறைச்சி (கோழி, மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி), உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் உள்ளூர் மசாலாப் பொருட்களின் கலவையால் மாவில் நனைத்து வறுக்கப்படுகிறது .
இது மலேசிய வீதிகளில் பரிமாறப்படும் ஒரு உண்மையான சிற்றுண்டியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், “இங்கு என்ன நடக்கிறது ஒன்னும் புரியவில்லை..”, “கடவுள் ஏஐ நம் கையை மீறி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது”, “இது பொய்யான வீடியோவாக இருக்க வேண்டும் என நம்புகிறேன்” என ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Readmore: கானா அரசு நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்…!