தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும், நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. இதை மீறினால் பணியிடை நீக்கம் பணியிட மாறுதல் என்று மிரட்டுகிறார்கள். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று தெரிவித்துவிட்டு F1-2 என 500க்கும் மேற்பட்ட கடைகளை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனால் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இதனால் பயன்பெறுவார். யார் ஊழலை கட்டுப்படுத்த வேண்டுமோ அந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே டாஸ்மாக் பணியாளர்கள் தவறு செய்ய காரணமாக, இருக்கிறார்கள் என்று பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கரூர் குரூப் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்படுகின்றனர். ஊழலை கட்டுப்படுத்த வேண்டிய சிலரே ஊழியர்களை தவறு செய்ய தூண்டுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனை பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் நல சங்கம் வன்மையாக கண்டித்து இருக்கிறது.