அச்சுறுத்தும் பி.எஃப்.7 கொரோனா..!! மீண்டும் வேகமெடுக்கும்..!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

நாட்டில் அடுத்த சில நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


BF.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது, சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே 3, 4 என்று வந்த தொற்று எண்ணிக்கை தற்போது 39 என எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்திக் கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அவர்களோடு தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருகிறது.

அச்சுறுத்தும் பி.எஃப்.7 கொரோனா..!! மீண்டும் வேகமெடுக்கும்..!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களால் இந்தியாவில் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த கால கோவிட் பரவல் மதிப்பீடு அடிப்படையில் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் அடுத்த 40 நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவிக்கின்றன. ஒருவர் பாதிக்கப்பட்டால் 10 முதல் 18 நபர் வரை பாதிக்கக்கூடும் என்பதால் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மற்றொரு அலைக்கு பயந்து சுகாதார வசதிகளின் செயல்பாட்டு தயார் நிலையை கட்டாய மதிப்பாய்வு செய்து வருகின்றன. மேலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

CHELLA

Next Post

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் - முற்றிலும் உறைந்துபோன நயாகரா நீர் வீழ்ச்சி…

Thu Dec 29 , 2022
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், முக்கிய சுற்றுலாத்தலமான நயாகரா அருவி முற்றிலும் உறைந்து காணப்படுகிறது. அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் நிலவிய பனிப்புயல் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில்  சூறாவளி காற்றுடன் அங்கு வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டு […]
nayagara 1

You May Like