இது வரை 6,11,61,947 கோடி SIR படிவங்கள் விநியோகம்…! தேர்தல் ஆணையம் தகவல்….!

tamilnadu sir election commission

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும்.தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50,97,44,423 ஆக உள்ளது. இதில் 50,40,90,682 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவிர திருத்தப் பணிகளில் 5,32,828 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 11,40,598 வாக்குச் சாவடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு..!! மக்களே ரெடியா இருங்க..!! இன்று மேலும் விலை குறையும்..?

Fri Nov 21 , 2025
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் சரிவு : சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like