சொக்க வைக்கும் ஆயில் மசாஜ்..!! ஆடி ஆஃபர் இருக்கு வாங்க..!! நம்பி சென்ற இளைஞருக்கு ஆப்பு வைத்து காதலி..!!

சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் 25 வயது இளைஞர் ஒருவர், சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அக்கம்பக்கம் வீடு என்பதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு தனியார் நிறுவனம் பெயரை சொல்லியிருக்கிறார் அந்த பெண். இதையடுத்து, நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி உள்ளது. ஆனால், அந்த பெண்ணின் நடவடிக்கையில், இளைஞருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இறுதியில், அந்த பெண் அண்ணா நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருவதை இளைஞர் உறுதிசெய்துவிட்டார். இதை பற்றி கேட்டதற்கு முதலில் மறுத்தாலும், பிறகு ஆதாரத்துடன் இளைஞர் சொன்னதை வைத்து, வேறு வழியின்றி அந்த பெண் ஒப்புக்கொண்டாராம். அதற்கு பிறகு, மசாஜ் சென்டர் என்றால் என்ன? அங்கு என்னவெல்லாம் நடக்கும்? என்பது குறித்து விலாவரியாக இளைஞருக்கு விளக்கி உள்ளார். அதில் ஒன்றுதான் ஆயில் மசாஜ். சொக்கவைக்கும் இந்த ஆயில் மசாஜ் பற்றி கேட்டவுடனேயே, இளைஞருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

நாளடைவில் ஆயில் மசாஜூக்கு அடிமையும் ஆகிவிட்டார் அந்த இளைஞர். ஆயில் மசாஜ் இடங்களை பற்றியெல்லாம் விவரம் சேகரித்தார். எங்கெல்லாம் ஆயில் மசாஜ் செய்வதாக, தன்னுடைய வாட்ஸ்அப்புக்கு மெசேஜ் வருகிறதோ, அங்கெல்லாம் போக ஆரம்பித்தார். இதற்காக, அந்த பெண், இளைஞரிடம் பணம் வாங்கி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் தகராறு வெடிக்கவும், அந்த பெண்ணுடன் பழகுவதை இளைஞர் நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், இளைஞரை பழிவாங்க முடிவு செய்தார்.

அதற்காக, வேறொரு மசாஜ் சென்டரில் இருந்து அனுப்புவதுபோல, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த இளைஞருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் இளம்பெண். ஆனால், இது தெரியாத இளைஞரோ, புதிய மசாஜ் சென்டர் என்பதால் சபலப்பட்டுள்ளார். எனினும் அந்த நேரத்தில் டியூட்டியில் இருந்ததால் மெசேஜ்ஜை அப்படியே விட்டுவிட்டார். இதற்கு நடுவில், மெசேஜ் அனுப்பியும், இளைஞரிடமிருந்து பதில் வராததால், அந்த கும்பல் இளைஞருக்கு நேரடியாகவே போன் செய்துள்ளது.

அப்போது, இளைஞரிடம் ஒரு பெண் பேசியுள்ளார். எங்கள் ஸ்பாவில் ஆடி ஆஃபர் தருகிறோம். அதனால் கட்டணமும் குறைவு. ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்துள்ளார். உடனே இந்த இளைஞரும், அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கே சென்று பார்த்தால், இளம்பெண்ணுடன், 5 இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அங்கேயே நிர்வாணமாக்கியுள்ளனர். அத்துடன், தவறு செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று எழுதி வாங்கிக் கொண்டு, இளைஞரிடமிருந்த 15,000 ரூபாயையும், டெபிட் கார்டில் இருந்து 3,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டு பறந்தது அந்த கும்பல்.

இதனால் நிலைகுலைந்துபோன இளைஞர், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட பெண் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் மூலகாரணமான அந்த பெண்ணின் பெயர் ஆண்டன் பெனினா. அவர் இப்போது மும்பைக்கு எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Chella

Next Post

பாகிஸ்தானில் பதற்றம்..! முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது..! நீதிமன்றம் அதிரடி…

Sat Aug 5 , 2023
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது எம்.பி. பதவியில் தொடர்வதால், இந்த வழக்கு கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றது அல்ல என இம்ரான்கான் தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த […]

You May Like