கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதே இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..
இதனிடையே தவெக நிர்வாகி அருண்ராஜை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சந்தித்து பேசினார்.. அதே போல் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.. இந்த சூழலில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்..
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது, ஒற்றுமையாக இருக்கிறது.. கூட்டணி பலமாக இருக்கிறது.. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியது பற்றி எனக்கு தெரியாது..” என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.. இந்த விழாவில் தவெக மூத்த நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர்.. அதே போல் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர்..
இந்த விழாவில் திருச்சி வேலுச்சாமி சூசகமாக போடி வைத்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் ஏற்படப் போகும் திருப்புமுனைக்கு அமைந்திருக்கிறது. பாவப்பட்டவர்களை ரட்சிக்கவும், ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றவும் ஏசு தோன்றினார்.. பாவிகள் ரட்சிப்பு, ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றும் எண்ணம் கொண்டோர் மட்டுமே இங்கு கூடியுள்ளோம்.. நாம் இணைந்திருக்கிறோம்.. இணைப்பு பலப்படும்.. நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்.. அந்த நல்லது விரைவில் நடக்கும்.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம் காங்கிரஸ் – தவெக கூட்டணி விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்றும் இந்த கூட்டணி விரைவில் உறுதியாகும் என்று கூறப்படுகிறது..
Read More : நாற்காலிக்காக அரசியலுக்கு வராதவர்; எம்.ஜி.அர். நினைவு நாளில் அதிமுக பதிவு..! விஜய்க்கு பதிலடி?



