பாஜக – அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.
திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படியான சூழலில் பாஜக – அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறி வந்தார். ஆனால் சமீபத்தின் நெல்லைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி உடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தியிருந்த நிலையில், NDA கூட்டணியில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார். தற்போது அதிமுகவிற்கு இது மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்விஎழுப்பினர் . அதற்கு நடிகர் விஜய் இன்னும் அரசியலில் பங்கு பெறவில்லை. தற்பொழுது வரை அவர் அரசியல் கட்சிதான் துவக்கி இருக்கிறார் . இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. இதன்காரணமாக அவரின் செயல்பாடுகளை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.
Read more: பால் – டூத் பேஸ்ட் முதல் மொபைல்-சோப்பு வரை!. ஜிஎஸ்டி மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?