நேற்று நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. எதிர்கட்சிகல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடந்து வருகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 72 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவு முடிந்தது.
குரூப்-1 பிரிவில் 70 காலி பணியிடங்களுக்கும், குரூப்-1 ஏ பிரிவில் 2 இடங்களும் என 72 இடங்களுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. கேள்வி ஒன்றில் கூற்று(A) திமுக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமாகப் பங்கெடுத்தது. காரணம்(R) திமுக, மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வற்புறுத்தியது என 6 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. டிஎம்பிஎஸ்சி ஆளுங்கட்சிக்கு துதிபாடுவதுபோல் நடப்பது நியாயமானது அல்ல என அதிமுக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
Read more: அப்துல் கலாமுடன் பணியாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..!!