தமிழகமே..! TNPSC தேர்வர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…!

group 2 tnpsc 2025

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 1,270ஆக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 825 பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும்.ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 202ம் ஆண்டு அறிவிக்கையில் ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் எழு நிதியாண்டுகளுக்கு 8784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி 11 மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கம் அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்..? புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

Wed Nov 19 , 2025
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய […]
Gold Loan 2025

You May Like