Today Gold Rate: சரசரவென குறைந்த விலை..! தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்..! முழு விவரம்…

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 55,080ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 22) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ. 6,845க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது, இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்நத 5 நாட்களாக மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளியின் விலை தற்போது குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 89 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.89,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

கூட்டுறவு நகர வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Apr 22 , 2024
Jewel Appraiser பதவிக்கு அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 30 […]

You May Like