ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு நிகழும் என்று புதிய பாபா வங்கா கணித்த ஜூலை 5 இன்றுதான். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் ‘புதிய பாபா வங்கா’ என அழைக்கப்படுகிறார். மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே இவர் கணித்திருந்தார். இவர் எழுதியுள்ள புத்தகத்தில், 2025 ஜூலை 5 ஆம் தேதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பெரியளவிலான சுனாமி ஏற்படும். இந்த சுனாமியானது, 2011 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஜப்பானுக்கு வர திட்டமிட்டுருந்த சுற்றுலா பயணிகள், 50 சதவீதம் பேர் தங்களது முன்பதிவை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தென்மேற்கு ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு தொலைதூர தீவு சங்கிலியில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. இதேபோல், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பாபா வங்கா கணித்த நாள் இன்றுதான் (ஜூலை 5). சுனாமி பேரழிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இருப்பினும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், டோகாரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, மங்காவில், ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கு அடியில் ஒரு விரிசல் ஏற்படும் என்றும், அது மிகப்பெரிய அலைகளை ஏற்படுத்தும் என்றும், இது 2011 இல் ஜப்பானைத் தாக்கிய கொடிய சுனாமியை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, அதே பகுதியில் நிலத்தடியில் இதேபோன்ற ஒன்று நடப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வின்படி, இரண்டு டெக்டோனிக் தகடுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக படிப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நான்கை பள்ளத்தாக்கில்(Nankai Trough) மெதுவாக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவை ஆழத்தில் ஏற்படும் சிறிய, அமைதியான நிலநடுக்கங்களாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 1,400 ஆண்டுகளில், நான்கை பள்ளத்தாக்கில், ஜப்பான் ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை “மெகா நிலநடுக்கத்தை” சந்தித்துள்ளது. சமீபத்தியது 1946 இல் நிகழ்ந்தது மற்றும் ரிக்டர் அளவுகோலில் 8.1 மற்றும் 8.4 ஆக அளவிடப்பட்டது.
2011 ஆம் ஆண்டில், ரிக்டர் அளவுகோலில் 9 முதல் 9.1 வரையிலான நீருக்கடியில் ஏற்பட்ட மெகாத்ரஸ்ட் நிலநடுக்கம் ஜப்பானையும் உலுக்கியது. கூடுதலாக, 2011 சோகம் ஜப்பான் இதுவரை சந்தித்ததிலேயே மிக வலிமையான நிலநடுக்கமாகும். அரசாங்கக் குழுவின் கூற்றுப்படி, அடுத்த 30 ஆண்டுகளில் நான்கை பள்ளத்தாக்கில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 82 சதவீதம் வாய்ப்புள்ளது. இது முந்தைய மதிப்பீட்டை விட 75 சதவீதம் அதிகமாகும். ஜப்பானின் பூகம்ப ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, இதுபோன்ற நிலநடுக்கம் 2,98,000 பேர் வரை கொல்லப்படலாம் மற்றும் 2 டிரில்லியன் டாலர்கள் வரை சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: அலர்ட்!. உங்க போனில் இந்த அளவு ரேடியேஷன் இருந்தால் அதை பயன்படுத்தக்கூடாது!. எப்படி தெரிந்துகொள்வது?.