எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

college 2025 1

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.


மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாகும். 20, 21-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

Vignesh

Next Post

அமைச்சர் ஆர். காந்திக்கு தீவிர உடல்நலக் குறைவு..!! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை..!! வெளியாகிறது மருத்துவ அறிக்கை..!! என்ன ஆச்சு..?

Mon Nov 17 , 2025
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சரும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஆர். காந்தி, நேற்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்த முழு விவரம் உடனடியாக தெரியாத நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரது […]
R Gandhi 2025

You May Like