சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வரத்தை பொறுத்து நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. மொத்த விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: Rain: இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!