பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம்….! டிஎஸ்பி பெண் ஆய்வாளர் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு…..!

சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி தடை நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தேவகோட்டை காவல் நிலையத்தில் இவர் மீது புகார் வழங்கப்பட்டது.

இதில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சிலர் கட்டப்பஞ்சாயத்து பேசி 50 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கி உள்ளனர். அதோடு மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, மனம் உடைந்து காணப்பட்ட நாச்சியப்பன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி புதுக்கோட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் இதனால் சிறுமியின் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அந்த சிறுமியின் தாயார் மனுவை தாக்கல் செய்துள்ளார். நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா தேவியும் தன்னுடைய கணவரிடம் இருந்து பணத்தை பறித்து தற்கொலை செய்ய தூண்டியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த 2 மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் சிபிசி விசாரணைக்கு பரிந்துரை செய்தது. சிபிசிஐடி விசாரணையில் நாச்சியப்பன் மிரட்டி பணம் பறிக்கப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே மிரட்டி பணம் வாங்கிய சம்பவத்தில் கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் குணாளன், ஆலங்குடியை சேர்ந்த சாத்தையா, கல்லலைச் சேர்ந்த சரவணன், தேவகோட்டை சேர்ந்த பாலாஜி, அமராவதி புதுரை சேர்ந்த வேலு கிருஷ்ணன், மேலமங்கலத்தைச் சேர்ந்த ஆதிமூலம், வெற்றியூரை சேர்ந்த சங்கு உதயகுமார், தேவகோட்டை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ரமேஷ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்திய சீலா, நல்லான்குலத்தைச் சேர்ந்த கலை, கீழ்பூங்குடியைச் சேர்ந்த தேவேந்திரன் உள்ளிட்ட 11 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 211,384,389 மற்றும் 306 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் குணாளன், பாலாஜி, தேவேந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக இருக்கின்ற மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்கொலைக்கு தோண்டிய வழக்கிலும் இதேபோல 11 பேர் மீதும் புதுக்கோட்டை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

அனுமதியின்றி பாரில் மதுபானம் விற்பனை…..! விசாரிக்க சென்ற காவலர்களை தாக்க முயற்சி செய்த திமுக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு……!

Fri Jun 9 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள வானக்கன் காடு கிராமத்தில் டாஸ்மாக் கடையில் அனுமதி இன்றி பார் இயங்குவதாகவும் அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில், தனி படை காவல்துறையினர் முத்துக்குமார், மகேஸ்வரன் உள்ளிட்டோர் இரு நாட்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திமுகவின் வடக்கு மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி தலைவரான மதியழகன்(55) என்பவர் வந்தார் அப்போது அனுமதியின்றி நடத்தி […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like