5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு..!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,199-ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 85,076 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விஜய் பட நடிகையா இது..? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

Mon Apr 10 , 2023
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். இந்த புகைப்படத்தில் சிறு வயதில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாப்பில் இருந்த நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். […]
விஜய் பட நடிகையா இது..? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

You May Like