நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் இந்தியர்கள் இதை ஏற்றுக்கொண்டனர்.. சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்..

நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால், இந்தியர்கள் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்..

முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை விமர்சித்துள்ளார்.. மேலும் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்தியர்கள் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடி உள்ளார்..

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி “ நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை மதிக்கிறது.. எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என்று மோடி மயக்கத்தில் இருக்கும்போது லடாக்கின் சில பகுதிகளை சீனா கைப்பற்றியது. நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்பதை சீனா அறிந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்..

சீனாவின் எச்சரிக்கைகயை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

தொடர் கனமழையால் ஒகேனக்கல்லில் காட்டாற்று வெள்ளம்..! நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் அபாயம்..!

Wed Aug 3 , 2022
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் இரண்டாது முறையாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35,629 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 9,250 கனஅடி நீரும் திறந்து […]
’போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து நீர்திறப்பு’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

You May Like