”இஸ்லாமிய மாணவிகள் இனி இந்த ஆடைகளை அணியக்கூடாது..!! அதிரடியாக தடை விதித்த நாடு..!!

அபாயா எனப்படும் இஸ்லாமிய ஆடையை அணிய பள்ளி மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடக்கமான உடையாக கருதப்படும் இந்த ஆடைக்கு தற்போது பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் பள்ளிக்கு திரும்பும் பருவத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதால், இனி யாரும் பள்ளிக்கு அபாயா அணிந்து வர முடியாது.

இதுத்டொடர்பாக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், “இனி பிரான்ஸ் நாட்டின் அரசுப் பள்ளிகளில் அபாயா அணிவது சாத்தியமில்லை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வகுப்புகளுக்குத் திரும்புவதற்கு முன்னதாக, பள்ளித் தலைவர்களுக்கு தேசிய அளவில் தெளிவான விதிகளை வழங்குவதாக கூறினார். பிரெஞ்சு பள்ளிகளில் அபாயா அணிவது குறித்த பல மாத விவாதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முஸ்லிம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிப்பதில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை என்ற கொள்கையானது, ஒருவரை மதத் தளைகளில் இருந்து விடுவிப்பதற்கான சுதந்திரம் என்றால், அதில் ஆடைகளுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அபாயா என்பது மதத்தை சுட்டிக்காட்டும் ஆடையாக உள்ளது. பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டிய மதச்சார்பற்ற உணர்வை நோக்கி செல்வதற்கான முக்கியமான முடிவு இது” என்று பிரான்ஸ் நாட்டு கல்வி அமைச்சர் கூறியுள்ளார். நீங்கள் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறீர்கள், மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது என்றும் அவர் கூறினார்.

மார்ச் 2004இல் உருவான பிரான்ஸ் நாட்டின் சட்டத்தின்படி, பள்ளிகளில் “மாணவ, மாணவிகள் அப்பட்டமாக மதச் சார்பைக் காட்டும் அடையாளங்கள் அல்லது ஆடைகளை அணிவது” தடை செய்யப்பட்டுள்ளது. பெரிய சிலுவைகள், யூத கிப்பாக்கள் மற்றும் இஸ்லாமிய தலைக்கவசங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அபாயாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’அமைச்சர் செந்தில் பாலாஜி இனி ஆஜராக தேவையில்லை’..!! சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Mon Aug 28 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, ஆகஸ்ட் 12ஆம் […]

You May Like