fbpx

நோட்…! மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பலருக்கு கிடைக்கிறது காரணம் இது தான்…! உடனே சரி செய்யவும்…!

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.

திட்டத்திற்காக விண்ணப்பித்த பல லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு கடந்த மாதம் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல பணம் கிடைத்தாத பலர் அரசு அலுவலகங்கள், வங்கிகள், இ சேவை மையங்கள் என அலைந்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்க காரணம், முகவரி, ஆதார் விவரம், வங்கி கணக்கு விபரம் போன்றவை சரியாக இல்லாததால்தான் என்று கூறப்படுகிறது.

அரசு வைத்துள்ள தரவுகளுடன் விண்ணப்பதாரர்களின் விபரங்கள் பொருந்தாத காரணத்தால் உரிய தரவுகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் உள்ளன. அதே போல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் உங்கள் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ளலாம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் ‌

இப்படி தகவல்கள், தரவுகள் முறையாக இல்லாதவர்கள் மீண்டும் இ சேவை மையத்தை அணுகி உரிய தகவல்களை வழங்கி விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது அல்லாமல் அரசு நிர்ணயித்த தகுதிகளுக்குள் வராத பலரும் விண்ணப்பித்த உள்ள நிலையில், கள ஆய்வில் அவை தவறு என்று தெரிய வந்ததால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

Vignesh

Next Post

"கூட்டத்தில் நிற்பது எளிதானது ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்"!… இன்று மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம்!

Mon Oct 2 , 2023
மகாத்மா என்று அழைக்கப்படும் இந்திய சுதந்திரத்தின் தந்தை காந்தியடிகள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாள் உலக அளவில் வன்முறைக்கு எதிரான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வாழ்க்கை தொகுப்பு குறித்து பார்க்கலாம். காந்தியடிகளின் இயற்பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 […]

You May Like