கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்த விலைவாசி – தனியார் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல்…!

நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த நிலையில் நம் வீட்டுக்கு மாதம் மாதம் தேவையான அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது குறித்து மும்பையை சேர்ந்த Axis my india எனும் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

எதற்காக அதிக செலவு செய்யப்பட்டது? என்னக் காரணம்?

☞ வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான செலவு கடந்த 2021 ஆம் ஆண்டைவிட 2022-ல் அதிகமாக உயர்ந்திருந்ததாக 73% மக்கள் தெரிவித்துள்ளனர்.

☞ மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான செலவு 2021 ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு உயர்ந்துவிட்டதாக 39% குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

☞ விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம்தான் காரணம் என 50% மக்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் எதை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள்?

☞ மொபைல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாக 52% மக்கள் கருத்து.

☞ யூடியூப் பார்ப்பது அதிகரித்திருப்பதாக 25% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

☞ சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக்-தான் அதிகம் பயன்படுத்துவதாக 35% மக்கள் தெரிவித்துள்ளனர்.

வருங்காலத்தில் எதில் முதலீடு செய்வீர்கள்?

☞ இந்த ஆண்டு முதலீடுகளை எவ்வாறு திட்டமிடுவீர்கள் என்ற கேள்விக்கு மியூச்சுவல் ஃபண்டு, காப்பீடு, தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வோம் என 40% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

☞ குழந்தைகளின் படிப்புக்கு முதலீடு செய்வோம் என 34% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

☞ நிலம் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்வோம் என 16% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

தோல்வி அடைந்த பிரின்ஸ் படம்! ரூ.3 கோடி நஷ்ட ஈடு வழங்கினார் எஸ்.கே!

Wed Jan 4 , 2023
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்காவும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் […]

You May Like