தண்டனையை ரத்து செய்ய இயலாது….! ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…..!

சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மோடி சமூகம் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராகுல் காந்தியின் மீது குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர் பூர்னேஷ் மோடி தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அவருக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 வருட காலம் சிறை தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்க்கும் விதமாக கடந்த 3ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அத்துடன் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் தெரிவித்து ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த 2 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்து இருந்த மனு மீது சென்ற வாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு சூரத் நீதிமன்றம் கூடுதல் நீதிபதி முஹாராவ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்து முடிந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற போது கடந்த 2019 ஆம் வருடம் தேர்தலின் போது பேசிய பேச்சு கண்டிக்கத்தக்கது என நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அவருடைய தண்டனையை ரத்து செய்ய இயலாது என்றும் இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

ஆகவே ராகுல் காந்தியின் எம்பி பதவியை அவர் மீண்டும் பெற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ராகுல் காந்தி தரப்பில் இன்று மாலை அல்லது நாளை காலையில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனால், ராகுல் காந்தியின் மீண்டும் எம்.பியாக பதவியைப் பெற முடியாத சூழல் உள்ளது. ராகுல் காந்தி தரப்பில் இன்று மாலை அல்லது நாளை காலையில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

கள்ளக்குறிச்சி அருகே 35 வயது பெண் முற்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை…..! நடந்தது என்ன…..!

Thu Apr 20 , 2023
கள்ளக்குறிச்சி நரிமேடு சேர்ந்தவர் வளர்மதி (35) இவருடைய கணவர் 10 மாதங்களுக்கு முன்னர் விபத்தில் மரணமடைந்தார். எத்தகைய சூழ்நிலையில் வளர்மதி தன்னுடைய 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் உள்ளிட்டோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு வளர்மதி ஆட்டோ மூலமாக காய்கறி வியாபாரமும் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் வளர்மதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது இதனால் […]

You May Like