“வேலியே பயிரை மேய்ந்த கதை..”! பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நீதிபதி.! திரிபுராவில் அதிர்ச்சி.!

திரிபுரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது வீட்டில் இருக்கும்போது 26 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் பிப்ரவரியில் 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164-ன் படி தலாய் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியின் முன்பு தனது பலாத்கார வழக்கு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சென்றபோது, இளம் பெண்ணிடம் நீதிபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் கமல்பூர் பார் அசோசியேஷனில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கவுதம் சர்க்கார் தலைமையில், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட உடனேயே நீதிபதி அலுவலகத்துக்கு சென்ற குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்துள்ள புகாரில் “என்னுடைய கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதியின் முன்பு அறிக்கை அளிப்பதற்காக அழைத்து செல்லப்பட்டேன். நீதிபதியின் அறைக்கு நான் தனியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த பெண் காவலர்கள் அறைக்கு வெளியே தடுக்கப்பட்டனர் . நான் அறைக்குள் சென்றதும் நீதிபதி கதவை மூடினார். பின்னர் என்னை எழுந்து நிற்க செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்” என தெரிவித்துள்ளார். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதியே கற்பழித்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

English Summary:A 23 year ld rape victim was sexually assaulted by a judge when she went to record her statement. The shocking incident happened at tripura.

Read more: https://1newsnation.com/free-electricity-connections-to-50000-farmers-this-year-as-well/

Next Post

BREAKING | வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

Tue Feb 20 , 2024
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். BREAKING | பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு. * வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு. * தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி […]

You May Like