TN+2 Exam Result: தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருப்பது எந்த மாவட்டம் தெரியுமா….?

இந்த கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.அதன்படி 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இந்த வருடம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும் இது சென்ற வருடத்தை விட கூடுதல் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2021 நோய் தொற்று காலத்தை தவிர்த்து கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது சென்ற வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 93.76 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் 94.03 சதவீதமாக சற்றே அதிகரித்திருக்கிறது.

இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழி தேர்வு உள்ளிட்ட முக்கிய பாடங்களில் சராசரியாக 50000 திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது முந்தைய வருடத்தில் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை நான்கு சதவீதமாக இருந்த நிலையில் இந்த வருடத்தில் இந்த விகிதம் 6% என அதிகரித்திருக்கிறது.

இதனால் இந்த வருடத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஐந்து வருடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 2020 கல்வி ஆண்டு தவிர்த்து சற்று குறைவாக இருந்தது இதனால் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதமும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது.

தேர்ச்சி பெற்றவர்களின் மாணவிகளின் எண்ணிக்கை 4,21,013 எனவும் மாணவர்களின் எண்ணிக்கை 3,82,371 என்றும் இருக்கிறது வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 4.93 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 5.36 சதவீதமாக இருந்தது. சென்ற 5 வருடங்களில் இல்லாத அளவு 2021 ஆம் ஆண்டு நோய் தொற்று காலத்தை தவிர்த்து மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்திருக்கிறது.

சென்ற பொது தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957 என இருந்த சூழ்நிலையில் இந்த வருடம் பொது தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 32,501 என அதிகரித்து இருக்கிறது.

அதேபோல 97.85% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், அதேபோல 97.79 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், 97.58% பெயர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

Next Post

+2 தேர்வு முடிவுகள்….! தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 2 மாணவிகள்…..!

Mon May 8 , 2023
12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக திருப்பூர் 97.79 சதவீதம் தேர்ச்சி பெற்று 2வது இடத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்திலும் இருக்கிறது. அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த வருடம் இயற்பியல் வேதியல் […]

You May Like