எடப்பாடி பழனிசாமியின் “ மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் “ மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தின் பாடல் வீடியோ வெளியானது.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப்பயணத்திற்கான பாடல் மற்றும் லோகோவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.. திமுக ஆட்சியை அகற்ற எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது விருப்பம்.. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. திமுக ஆட்சியின் அவலங்களை என்னுடைய சுற்றுப்பயணத்தின் போது எடுத்துரைப்பேன்.. தமிழ்நாட்டு மக்களின் குரலாகவே அதிமுக இருந்து வருகிறது.. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்.. பலமான கூட்டணி அமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்..
மேலும் “ வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது.. கூட்டணி குறித்து விஜய் எடுத்தது அவரின் முடிவு என்றும் அதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..
Read More : சொல்லொணாப் பெருந்துயர்.. பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..