பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

MK Stalin dmk 6 1

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் நிவாஸ் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் – பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Read more: ரயில் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி.. கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல்..!!

Next Post

#Breaking : பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு.. ரயில் - பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்..

Tue Jul 8 , 2025
Death toll rises to 3 in train-school van accident
screenshot1950 down 1751950155 1

You May Like