பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்த கூடாது…! போக்குவரத்து துறை உத்தரவு…!

bus driver 1

பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக் கூடாது.

பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணி​யின் போது நடத்துநர்களுக்கு வழங்​கப்​படும் முன் பணத்தை பயணி​களுக்​கு, பயணச்​சீட்டு வழங்​கும் போது முறை​யாக பயன்​படுத்த வேண்டும். பயணி​களிடம் சில்​லறை தொடர்​பான விவாதங்​கள் தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்​டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

துளசி இலைகளை பறிப்பதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கா..? இந்த நாளில் தொடவே தொடாதீங்க..!!

Thu Nov 6 , 2025
இந்து மதப் பாரம்பரியத்தில், துளசி செடி மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்பட்டு, பெரும்பாலான வீடுகளில் தினமும் வழிபடப்படுகிறது. எங்கே துளசி தொடர்ந்து வழிபடப்படுகிறதோ, அங்கே லட்சுமி தேவியின் வாசம் நிலைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. துளசியை வழிபடுவதில் சில முக்கிய விதிகள் உள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஜோதிட நிபுணரான மஹந்த் சுவாமி காமேஸ்வரானந்த வேதாந்தாச்சார்யா கூறுகையில், துளசி இலைகளைப் போலவே அதன் பூக்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு […]
Thulasi 2025 1

You May Like