கணவரின் சகோதரர்களையும் திருமணம் செய்யும் பழங்குடி பெண்கள்!. இந்தியாவில் இப்படியொரு வினோத கிராமமா?

Hatti Tribe 11zon

இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன.


இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிர்மவுர் பகுதியில் உள்ள ஜமுனா கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்தார்

ஏழ்மையில் வாடிய இந்த குடும்பத்தினர் ஒரு சிறிய அறையில் தான் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதிலும் கணவரின் குடும்பம் மிகப்பெரியது என்ற நிலையில் சிறிய அறையில் பாதி இடத்தில் சுனிலா தேவியின் இல்லற வாழ்க்கையும் நடைபெற்றுள்ளது. சில நேரங்களில் அரை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்

அப்போது சுனிலா தேவியின் கணவரது இளைய சகோதரர் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சுனிலா தேவி, பள்ளியில் படிக்கும் தனது மைத்துனருக்கு மதிய உணவு தயார் செய்து கொண்டு சென்றுள்ளார். காலங்கள் கடந்தன. தனது கணவரின் இளைய சகோதரர் படிப்பை முடித்து வளர்ந்த நிலையில் அவனையும் திருமணம் செய்து கணவராக ஏற்றுக்கொள்ளும்படி சுனிலா தேவியின் கணவர் கூறியுள்ளார்.

நான் வேலை விஷயமாக அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவேன். எனவே எனது சகோதரன் உன்னையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொள்வார். எனவே நீ அவனையும் திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொள் என கட்டாயப்படுத்தி உள்ளார். இதைக்கேட்டு சுனிலா தேவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தனது மாமியாரிடம் முறையிட்டார். அப்போது உனது கணவர் சொன்னதை ஏற்றுக்கொள். அப்போது தான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என அறிவுறுத்தி உள்ளார்.

இது சுனிலாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் இதுதொடர்பாக தனது மாமனாரிடம் கூறியுள்ளார். அவரோ, இங்கே மிகவும் வறுமை இருக்கிறது. நீ ஒப்புக்கொண்டால் குடும்பம் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் சுனிலா தேவி கணவரின் இளைய சகோதரரையும் மணம் முடித்துள்ளார். 2 பேருடனும் குடித்தனம் நடத்தியது ஆரம்பத்தில் சுனிதா தேவிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. என்றாலும் நாளடைவில் அது வழக்கமாகி விட்டது. தற்போது 2 கணவர்களில் இளைய கணவர் தான் தன்னை அதிகம் கவனித்து கொள்வதாக சுனிலா தேவி கூறியுள்ளார்.

Readmore: “பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்வது ஒரு கோட்பாடாக இருக்க வேண்டும்; வசதிக்காக அல்ல”!. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

KOKILA

Next Post

பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Mon Jul 7 , 2025
சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், […]
MK Stalin dmk 6

You May Like