வாரத்தில் 2 முறை மட்டும் வீட்டில் இதை செய்து பாருங்க..!! பணம் கொட்டும்..!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் அதிகம் புரளும். ஆனால், உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை, உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். உப்பு ஜாடியில் எப்போதும் உப்பு நிரப்பி இருக்க வேண்டும்.

வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து மற்ற தினங்களில் வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். இன்று வீடு சுத்தம் செய்ய பல திரவங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை கொண்டு வீட்டை சுத்தம் செய்வதை விட கோமாதா சாணத்தை வைத்து வீட்டை துடைத்தால் அந்த ’வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். வீட்டு வாசலில் அரிசி மாவில் கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது, சாணத்தை கொண்டு வீட்டை துடைப்பது, பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நல்ல செயல்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் செல்வதை கொடுக்கும் லட்சுமி தயார் வீட்டில் வாசம் செய்வார்.

மேலும், வீட்டு பூஜை அறையில் காலை மற்றும் மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மண் அகல் அல்லது காமாட்சி விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணக் கஷ்டம் நீங்கும். வரவு பல மடங்கு அதிகரிக்கும். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மாலையில் வீட்டை கூட்டி சுத்தம் செய்த பின்னர் விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

Read More : ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Chella

Next Post

இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்!… இதன் நோக்கம், முக்கியத்துவம் என்ன?

Wed Apr 24 , 2024
National Panchayati Raj Day 2024:ஒரு நாட்டில் மக்களின் நலன் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குச் சீரான அரசியல் அதிகாரமும் முக்கியமாகும். இந்த அரசியல் அதிகாரங்களானது பகிர்ந்து அளிக்கப்படும் போதுதான் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். அப்படிப்பட்ட அதிகார பகிர்வு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்டம். இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை மறைந்த முன்னாள் இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்துள்ளார். […]

You May Like