தமிழ்நாடு டூரிசம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு சுற்றுலா மேம்பாட்டு துறையில் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணிகளுக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்போர் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருப்பவர்களும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு உச்சபட்ச வயது வரம்பு 45 ஆகும். இந்த வேலைவாய்ப்பில் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 – 1,00,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேனேஜர் பணிக்கு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 – 70,000/- வழங்கப்படுமென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 15.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே தங்களது விண்ணப்ப படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை நிர்வாக இயக்குனர், டிடிடீசி லிமிடெட், சுற்றுலா வளாகம், எண்- 2, வாலாஜா சாலை, டிரிப்ளிகேன், சென்னை -2. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய ttdc.co.in என்ற இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.