தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் தேமுதிக, பாமகவின் நிலைபாடு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. எந்த அணியில் இணைய வேண்டும் என இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனவரி மாதத்துக்குப் பிறகு கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக தே.மு.தி.க. ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும். ஏற்கெனவே திமுக-என்.டி.ஏ கூட்டணி உள்ளது. சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் விஜய் தலைமையிலும் ஒரு அணி உருவாகும்,”
என்று கூறினார்.
அவரிடம் “நீங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறீர்களா?” என கேட்கப்பட்டபோது, “நான் என்.டி.ஏ-வில் இருக்கிறேனா இல்லையா என்பதற்கு நாயினார் நாகேந்திரன் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவோம்,” என்று பதிலளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த் பேட்டியில், 2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல 2026 தேர்தலில் விஜய் தாகத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். தான் எதார்த்தமாக கூறுவதாகவும் அதற்காக அந்த கூட்டணிக்கு செல்வேன் என்று கூறுவதாக அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக டிடிவி தினகரன் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.