தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தனது முதல் தேர்தலை சந்திக்க தவெக தயாராகி வருகிறது.. திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது விஜய் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் அறிவித்து தேர்தலை சந்திக்க உள்ளது தவெக.
பல கட்சிகள் விஜயுடன் கூட்டணி வைக்க ரெடியாக உள்ள நிலையில் எதற்குமே வாய்திறக்கவில்லை விஜய். தற்போது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைய போகிறது என தகவலைகள் கசிந்து வருகின்றன. திமுக அரசு எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே இந்த கூட்டணி நிலைக்கும், இல்லையென்றால் காங்கிரஸ் கிளி விஜய் கூட்டை நோக்கி பறந்து விடும் என உசிலம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நேரிடையாகவே காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார் .
தமிழ்நாட்டில் காங்கிரஸ் – தவெக கூட்டணி வைத்தால் விஜய்யின் செல்வாக்கை கேரள காங்கிரசிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதலமைச்சர் தேர்வில் முதலில் இருப்பவர் வேணுகோபால். இவர் தமிழ்நாட்டில் தமிழக காங்கிரஸ் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஏனென்றால் கேரளாவில் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். காங்கிரஸ் – விஜய் கூட்டணி அமைந்தால் கேரள விஜய் ரசிகர்கள் வாக்குகள் தங்களுக்கே ஓட்டுகளாக விழும் என்று வேணுகோபால் நம்பிக்கையுடன் உள்ளார். மதுரை மாநாட்டிற்கு பிறகு அநேகமாக காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைவதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு அமைந்தால் விஜய் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என பெரிய கட்சிகள் பயத்தில் இருக்கிறார்களாம். இதனால் தர்ம சங்கடத்தில் இருக்கின்றனர் திமுக.
Read more: சூப்பர்..! 7 சதவீத வட்டியில் தமிழக அரசு வழங்கும் கடன் உதவி…! எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்…?