2026 தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு பணியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. முன்னதாக நடைபெற்ற மாநாடு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜகவை நேரடியாக விமர்சித்தார். இதன் மூலம் திமுக பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அரசியல் நகர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால் தவெக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் எதுவும் இடம்பெற கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். மக்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை கேட்டறிய நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய்யின் த.வெ.க., தி.மு.க.வின் வாக்கு வங்கிகளான சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் குறிவைத்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக உள்ள திமுக வாக்குகளைப் பிரித்து, த.வெ.க.வை ஒரு வலிமையான அரசியல் கட்சியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல்களில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என அந்த கட்சி நம்புகிறது.
Read more: நாயை கூட விட்டு வைக்கல.. நடுரோட்டில் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்..!! ஷாக் சம்பவம்..