TVK | 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள ரசிகர்களை சந்திக்கும் விஜய்.! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். மேலும் தனது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் அறிமுகப்படுத்தினார். தமிழக  வெற்றிக் கழகத்தின் செயலியின் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது கட்சியில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கேரள ரசிகர்களை விஜய் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரள ரசிகர்களை விஜய் சந்திப்பது முக்கியமான நிகழ்வாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

Next Post

GUJARAT | ரம்ஜான் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.!! அகமதாபாத்தில் பதற்றம்.!!

Sun Mar 17 , 2024
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயின்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்த 5 இஸ்லாமிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குஜராத் காவல்துறையினர் 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். […]

You May Like