மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெயில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மாநாடு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.. மேளதாள வாத்தியங்கள் முழங்க, லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் உற்சாகம் தொடங்கி மாநாடு நடைபெற்று வருகிறது..
தொடர்ந்து உங்க விஜய், உங்க விஜய், உயிரென வரேன் நான் என்ற தவெகவின் 2வது மாநில மாநாட்டின் சிறப்புப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.. பாடல் ஒலிபரப்பான போதே தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார்.. மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்த அவர், எழுந்த நின்ற தனது பெற்றோரை அமர வைத்தார்.. பின்னர் அவர்களை கட்டியணைத்து வரவேற்றார்.. அப்போது மகனின் கண்ணத்தில் அன்போடு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்..
மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில், தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறே நடந்து சென்றார்.. தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை தலையில் கட்டிய அவர், கழுத்திலும் மாலையாக போட்டுக் கொண்டார்.. சில கொடிகளை மீண்டும் தொண்டர்களிடம் வீசினார்.. விஜய்யை பார்த்த தொண்டர்கள் உற்சாகத்துடன் முழக்கம் எழுப்பினர்.. இதையடுத்து, 40 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.. இதையடுத்து விஜய் உள்ளிட்ட தவெகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.. மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிய்ன் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.. தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தொடக்க உரையாற்றினார்..
இதனிடையே, விஜய்யை காணும் ஆர்வத்தில் கடும் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் அவரை கண்ட திருப்தியில் மாநாட்டு திடலில் ஒருந்து வெளியேறி வருகின்றனர்.. விஜய் இன்னும் உரையை தொடங்காத நிலையில், தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்..
Read More : அதிர்ச்சி.. தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மாரடைப்பால் மரணம்!