’ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வா’..? ’அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல’..!! மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் ஆண்டுக்கு 2 முறை வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. அதாவது, மாணவர்கள் இரண்டு தேர்வு எழுத வேண்டும். அதில், எதில் அதிக மதிப்பெண் எடுக்கப்படுகிறதோ அந்த மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 2 முறை வாரியத் தேர்வுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது கட்டாயம் இல்லை. இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் எழுதலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் மட்டும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஆப்கானிஸ்தானில் அதி பயங்கர நிலநடுக்கம்..!! 2000 பேர் உயிரிழப்பு..!! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Sun Oct 8 , 2023
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்களை தாலிபான் அரசு வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் […]

You May Like