மகிழ்ச்சி…! கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.50,000 ஆக உயர்வு…! அரசாணை வெளியீடு

Bike tn government 2025

கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

ஒருகால பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒருகால பூஜைத் திட்ட அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

தமிழக அரசு சார்பில் கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20,000 வழங்கப்பட்டு வருகிறது. வாகனம் வாங்க இந்த தொகை போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை தொடர்ந்து அரசுக்கு வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து தற்பொழுது வாகனம் வாங்குவதற்கான கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Read More: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?

Vignesh

Next Post

Holiday: 3 நாள் தொடர் விடுமுறை... பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி...!

Thu Aug 7 , 2025
இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை. இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல […]
Holiday 2025

You May Like