ஒரு சர்பிரஸை பார்க்க கூகுள் தேடலில் ’67’ என டைப் பண்ணுங்க..! இதை மிஸ் பண்ண விரும்ப மாட்டீங்க!

67 search google

கூகுள் இன்று நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தேடல் இயந்திரமாக மட்டுமல்லாமல், ஆவண வேலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பயன்படும் ஒரு முழுமையான தளமாக அது உள்ளது. இதோடு சேர்த்து, பயனர்களை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்விக்கவும் கூகுள் அடிக்கடி “Easter Eggs” எனப்படும் மறைந்த அம்சங்களை வெளியிடும். அதில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒன்று – கூகுள் தேடலில் “67” என்ற எண்ணை மட்டும் டைப் செய்வது.


“67” என்று தேடினால் என்ன நடக்கும்?

நீங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் கூகுள் தேடல் பெட்டியில் “67” அல்லது “6-7” என்று டைப் செய்து Enter அழுத்தியவுடன், உங்கள் திரை திடீரென சில விநாடிகள் அதிர்ந்து, குலுங்கி நகரும். இந்த திடீர் திரை அசைவு பலரையும் பயமுறுத்தி,
“என் போனுக்கு என்ன ஆகிவிட்டது?”, “கணினி பழுதாகிவிட்டதா?” என்று பதற்றப்பட வைக்கிறது.

கவலை வேண்டாம் – இது ஒரு வேடிக்கையான அம்சம் தான்!

இது எந்தவிதமான ஹார்ட்வேர் கோளாறோ, மென்பொருள் பிழையோ அல்ல.
இது முழுக்க முழுக்க கூகுள் உருவாக்கிய ஒரு வேடிக்கையான ஈஸ்டர் எக்.

சமீப காலமாக இணையத்தில் வைரலாகும் “brainrot” எனப்படும் ஷேக்கிங் மீம் கலாச்சாரம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அம்சம், பயனர்களுக்கு சிறு நகைச்சுவை தருவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை கூகுளில் “67” என்று தேடும்போது, உங்கள் திரை குலுங்கினால் பதற்றப்பட வேண்டாம்.. அது கூகுளின் இன்னொரு சின்ன, வேடிக்கையான சர்ப்ரைஸ் தான்!

இது பாதுகாப்பானதா?

ஆம், இது முற்றிலும் பாதுகாப்பானது. “67” என்று Google-ல் தேடும்போது வரும் திரை குலுங்கும் (shake) விளைவு வெறும் பொழுதுபோக்குக்கான Easter Egg மட்டுமே. சில விநாடிகளில் தானாகவே திரை வழக்க நிலைக்கு திரும்பி விடும். எப்படியாவது அந்த அசைவு தொடர்ந்தால், பக்கத்தை Refresh செய்வதோ அல்லது Back பட்டனை அழுத்துவதோ செய்தால் உடனே சரியாகி விடும்.

நீங்களே முயற்சி செய்து பார்க்கும் முறை:

உங்கள் மொபைல், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் Google app அல்லது Google website-ஐ திறக்கவும்.

Search bar-ல் 67 என்று டைப் செய்து Enter அழுத்தவும்.

உடனே உங்கள் திரை சில விநாடிகள் குலுங்குவது போல அசையும்.

சிறிது நேரத்தில் தானாகவே இயல்பான நிலைக்கு திரும்பி விடும்.

Google search-ல் “do a barrel roll” என்று டைப் செய்து Enter அழுத்தினால், முழு பக்கமும் 360 டிகிரி சுற்றி சுழலும். முதலில் அது ஏதோ கோளாறு மாதிரி தோன்றலாம், ஆனால் அது Google உருவாக்கிய மிகவும் பிரபலமான, ரசிக்கத் தகுந்த Easter Egg தான்.

Read More : உலகின் மிகவும் விஷம் நிறைந்த பறவை..! அதைத் தொட்டால் மரணம் உறுதி..!

RUPA

Next Post

டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று அதிர வைத்த தீர்க்கதரிசியின் புதிய கணிப்பு..! இப்ப என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

Thu Dec 25 , 2025
கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகம் அழிந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த இளைஞர், தற்போது அந்த “அழிவு நாள்” தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எபோ ஜீஸஸ் அல்லது எபோ நோவா என அழைக்கப்படும் இவர், கானாவைச் சேர்ந்த 30 வயது நபர். கடந்த சில மாதங்களாக அவர், “கடவுளிடமிருந்து எனக்கு நேரடியாக தரிசனம் கிடைத்துள்ளது. டிசம்பர் 25 முதல் மூன்று […]
gana ebo

You May Like