Annamalai: உதயநிதிக்கு வெறும் வாய்ச்சவடால்தான்!… தாத்தா, அப்பா பெயரை வைத்து அரசியலுக்கு வந்தவர்… அண்ணாமலை விளாசல்!

Annamalai: உதயநிதி அவருடைய தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர். மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்குக்கூட உதயநிதி சமம் இல்லை என்று அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சுமார் 18 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுக காணாமல் போகும் என்றும் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அண்ணாமலைதான் என்றும் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயிநிதி ஸ்டாலின், கடந்த 70 வருடங்களாக திமுகவை அழித்துவிடுவதாக சொன்னவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என்றார். மேலும் மோடி மட்டுமில்லை அவரது தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்றும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி பேசுவார், தேர்தல் வந்தால் வேண்டாம் என்பார். உதயநிதிக்கு வெறும் வாய்ச்சவடால்தான். உதயநிதியின் பேக்கிரவுண்ட் என்ன? உதயநிதியின் பெயருக்கு பின்னால் உள்ள அவரது அப்பா பெயரையும் தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் அவரால் 2 ஓட்டு வாங்க முடியுமா? கருணாநிதி என்ற பெயரும் ஸ்டாலின் என்ற பெயரும் இல்லாவிட்டால் உதயநிதி யார்? அவங்க அப்பா சம்பாதித்த பணத்தில் படத்தில் நடித்த ஒரு Failed Actor. உதயநிதி யார்? தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் பயன்படுத்தி ஒரு எம்எல்ஏ. உதயநிதி யார்? தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் பயன்படுத்தி ஒரு அமைச்சர்.. அவ்வளவுதான்.

உதயநிதி ஸ்டாலின் தனது தரமும் தாராதரமும் தெரிந்து பேச வேண்டும். இதுவரை உதயநிதி ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியிருக்கிறாரா? ஏதாவது தொண்டு நிறுவனம் நடத்தியுள்ளாரா? மோடியின் தாத்தாவை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது. உதயநிதி அவருடைய தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர். பிரதமர் மோடியை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். ஆகையால்தான் சொல்கிறேன் மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்குக்கூட உதயநிதி சமம் இல்லை”.. என காட்டமாக கூறியுள்ளார் அண்ணாமலை.

Readmore: இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..? போக்குவரத்துத்துறை அதிரடி..!! வெளியான அறிவிப்பு..!!

Kokila

Next Post

Rain: வாட்டும் வெயிலுக்கு சின்ன பிரேக்!… இம்மாதம் முழுவதும் குடையை மறந்துடாதீங்க!… வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

Sat Mar 2 , 2024
Rain: மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்களுக்கு பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படுகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தை தணிக்க மக்கள் மழையை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, நம் […]

You May Like