மத்திய அரசு அதிரடி…! அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் விவரத்தை இலவசமாக புதுப்பிக்கலாம்…!

அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்.

நாடு முழுவதும் மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும். இந்த சேவையை myAadhaar எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும்.


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் பட்டியல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

Vignesh

Next Post

மகளிர் ஐபிஎஸ் தொடர்..!! முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி..!!

Thu Mar 16 , 2023
உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையான கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா […]
WhatsApp Image 2023 03 16 at 7.35.29 AM

You May Like