இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது..
உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் பிரமாண்டமான கல் சிலைகளுக்கு இது பிரபலமானது. இங்கு 99,999,999 சிற்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதற்கு உனகோடி என்ற பெயர் வந்தது. அதாவது உனகோடி என்றால் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு என்று அர்த்தம்..
புராணக்கதை:
உள்ளூர் புராணக்கதைகளின் படி, சிவபெருமான் ஒரு கோடி தெய்வங்களுடன் காசிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் ஒரு நாள் இரவு உனகோடியில் தங்கினராம். மேலும் சிவன், அனைத்து தெய்வங்களையும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தங்கள் பயணத்தைத் தொடர அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது.. இருப்பினும், சிவன் மட்டுமே அதிகாலையில் விழித்தெழுந்தார். மற்ற தெய்வங்கள் யாரும் விழிக்கவில்லையாம்.. இதனால் கோபமடைந்த சிவன், அனைத்து தெய்வங்களையும் கல் உருவங்களாக மாற சபித்தார் என்று சிலர் கூறுகின்றனர்..
அப்பகுதி மக்கள் இன்னொரு புராணக் கதையையும் சொல்கின்றனர்.. அதாவது பார்வதி தனது பக்தரான கல்லு குமாரை கைலாசத்திற்கு அழைத்த செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால் இதற்காக கல்லு குமார், ஒரே இரவில் ஒரு இரவில் ஒரு கோடி சிவனின் உருவங்களை செதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.. கல்லு அயராது உழைத்தார், ஆனால் ஒரு சிற்பத்தை அவரால் செதுக்க முடியவில்லை.. இதனால் அவரை முழுமையடையாத சிற்பங்களுடன் சிவபெருமான் அங்கேயே விட்டுச் சென்றார் என்று சிலர் நம்புகின்றனர்.
திரிபுராவில் உனகோடி ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் தொல்பொருள் அடையாளமாகும். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்..
பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்:
சிவன், விநாயகர் மற்றும் துர்க்கை உள்ளிட்ட பல்வேறு இந்து தெய்வங்களின் ஏராளமான பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளுக்கு உனகோடி பிரபலமானது.
உனகோடிஸ்வர கால பைரவர்:
மிக முக்கியமான அம்சம் உனகோடிஸ்வர கால பைரவர் என்று அழைக்கப்படும் சிற்பமாகும். இது 30 அடி உயர சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.
இயற்கை அமைப்பு:
இயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய பசுமையான காட்டுப் பகுதியின் மத்தியில் இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இது அந்த தலத்தின் அழகை மேம்படுத்துகிறது.
வரலாற்று சூழல்:
இந்த சிற்பங்கள் கி.பி 7-9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என்று அறிஞர்கள் நம்புகின்றனர். உனகோடி ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாக இருந்தாலும், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த இடம் கடந்த காலத்தில் தியானத்திற்கான ஒரு பௌத்த தளமாகவும் இருந்திருக்கலாம் என்றும், அதன் வரலாற்றில் மற்றொரு அடுக்கைச் சேர்த்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அங்கோர் வாட் :
உனகோட்டியில் உள்ள சிற்பங்கள் ஒரு வசீகரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, சில நிபுணர்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் சிற்பங்களுக்கு இணையாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
பாதுகாப்பு முயற்சிகள்:
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) மற்றும் அரசாங்கம் சிற்பங்களைப் பாதுகாக்கவும், உனகோட்டியை ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உனகோடி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தள அந்தஸ்துக்கான தற்காலிக பட்டியலில் உள்ளது, இது அதன் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
Read More : செவ்வாய் பெயர்ச்சி.. இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..