உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்…!

gun 2025

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல் நீர்பிடிப்புப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல அதிக அளவில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள். மயில்கள், பன்றிகள் மற்றும் இதர பறவை இனங்கள், அரியவன உயிரினங்கள் உள்ளன. இந்த வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அதை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களிடமோ, காவல்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது வனக்குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது.

ஆனால், ஒப்படைக்காமல் உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பின்னர் காவல் துறையுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மூலம் மலைக்கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள வனக்கிராமங்களில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சோதனை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எண்ணெய் இல்லாத சமையலுக்கு Air fryer பயன்படுத்துறீங்களா..? இதில் என்ன ஆபத்து இருக்கு தெரியுமா..? இப்படி மட்டும் சமைக்கவே கூடாது..!!

Mon Aug 25 , 2025
சமீப காலங்களில் ஏர் ஃப்ரையர் (Air fryer) எனப்படும் சமையல் சாதனம் பலரது இல்லங்களின் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பான உணவுகளைச் சமைக்கலாம் என்பதே இந்த சாதனத்தின் ஈர்ப்பு. கோல்டன் ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் முதல் பிரோஸ்டட் சிக்கன் வரை, ஒரு துளி எண்ணெய் கூட இல்லாமல் சமைக்கலாம் என்பதே இதன் சிறப்பு. இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரைப்பை மற்றும் குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி […]
Air fryer 2025

You May Like