உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரமோத் என்ற நபர், இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் சித்புரா பகுதியில் நடந்துள்ளது. 20 வயது ஷிவானி என்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தகவலின்படி, 2018-ஆம் ஆண்டு பிரமோத்-ஷிவானி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில், பிரமோத் தனது மாமியாருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவை காரணமாகக் கொண்டு, குடும்பத்திற்குள் அடிக்கடி வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டுள்ளது. ஷிவானியின் உறவினர்கள் கூறுகையில், தகாத உறவை கண்டித்ததால் பிரமோத் அவளை அடிக்கடி தாக்கி வந்ததாகவும், இறுதியில் வன்முறையால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவானி உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தம்பதியினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஷிவானி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு, பிரமோத் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில், பிரமோத் மற்றும் அவரது மாமியாரைச் சார்ந்த ஆபாச புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஷிவானியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பிரமோத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.