ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இனி ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும். கூகுள் பே, பேடிஎம், போன் பே, பாரத் பே என பல தனியார் நிறுவனங்களின் மொபைல் வாலெட் அப்ளிகேஷன்களில் யுபிஐ பேமெண்ட் என்ற பணப் பரிவர்த்தனை வழிமுறை இடம்பெற்றுள்ளது. இந்த முறை உடனடியாக தொகையை செலுத்தவும் பெறவும் முடிகிறது. இதுவரை இந்த யுபிஐ பேமெண்ட் வசதியைப் பெற வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது டெபிட் கார்டு விவரங்களை நமது மொபைலில் உள்ள பேமெண்ட் அப்ளிகேஷன்களில் இணைக்க வேண்டும். அதன்பிறகு நமக்கான பிரத்யேக யுபிஐ ஐடி கிடைக்கும். அதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்துவருகிறோம்.


இந்நிலையில், புதிதாக ரூபே க்ரெடிட் கார்டு மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம் BHMI UPI, Google Pay, Phone Pe, Paytm போன்ற பேமெண்ட் செயலி வைத்திருப்பவர்கள் அதில் கிரெடிட் கார்டு விவரங்களை இணைத்து அதன் மூலம் UPI பேமெண்ட்களைச் செய்யலாம். மற்ற யுபிஐ பரிவர்த்தனைகளைப் போலவே இதிலும் தினசரி வரம்பு உண்டு. அதன்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பிஎன்பி நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்ட கிரெடிட் கார்டு வழங்கும் பல வங்கிகள் இந்த யுபிஐ பேமெண்ட் வசதியையும் அனுமதிக்கின்றன. பரிவர்த்தனைகளின்போது கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியால் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

CHELLA

Next Post

மெட்ரோ ரயில்கள் வாங்கியதில் உண்மையிலேயே முறைகேடுகள் நடைபெற்றதா…..? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம்…..?

Sun Apr 16 , 2023
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டது. அப்படி வாங்கப்பட்டதில் 200 கோடி ரூபாய் லஞ்சம் கை மாறி உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தார். இந்த டெண்டரை வாங்கிய பிரான்சை சேர்ந்த நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலுமாக தவறானது என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் […]
Annamalai

You May Like