Vadivelu | திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் வடிவேலு..? எந்த தொகுதி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் வடிவேலுவுக்கு திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத சக்தி என்றால் அது வடிவேலு தான். வாழ்வில் எந்த சூழலிலும் வடிவேலுவின் காமெடி பொருத்தமானதாக அமைந்திருக்கும். அவர் திரை உலகில் தீவிரமாக தற்போது காணப்படவில்லை என்றாலும் அவரது மீம்ஸ்கள் தான் எல்லா சூழலுக்கும் பொருத்தமானதாக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது திரை வாய்ப்புகள் குறைந்து போனதற்கு காரணம் அவர் திமுகவுக்கு ஆதரவாக கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்தது தான் என்று கூறப்படுகிறது.

அப்போது நடிப்பு உலகில் உச்சத்தில் இருந்து வந்த வடிவேலுவை திமுக தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைத்தது. வடிவேலுவும் தமிழ்நாடு முழுவதும் திமுக மேடைகளில் பிரச்சாரத்தை பலமாக மேற்கொண்டார். அதிலும் குறிப்பாக அப்போது விஜயகாந்த்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா முதலமைச்சரானார். அதனால் அவருக்கு பயந்து திரையுலகில் யாரும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வந்தார் என்ற போதிலும் ஒரு சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த படங்களும் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார் வடிவேலு. இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் குறித்தும், திமுக மற்றும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார். அதிலும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்த பிறகு திமுகவுடன் அவரது நெருக்கம் அதிகமாகியுள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தங்களால் பாதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க திமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவேலுவுடனும் கலந்துரையாடப்பட்டிருப்பதால் அதற்கு அவரும், சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலு திமுக சார்பில் போட்டியிடப் போகிறார் என்பதாக தகவல்கள் பரபரத்துக் கிடக்கின்றன.

Read More : Abortion | ’கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உள்ளது’..!! அதிரடியாக நிறைவேறிய சட்ட மசோதா..!!

Chella

Next Post

Lok Sabha | 40 தொகுதிகளிலும் களமிறங்கும் விவசாயி சின்னம்..!! அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!!

Tue Mar 5 , 2024
மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ என்ற கட்சி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அங்கீகாரம் இல்லாத கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னத்தை பெறுவதில் போட்டி போட்டு வருகின்றன. இதற்காக தேர்தல் […]

You May Like