பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது
ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய 40% பேரை உள்ளடக்கியது. மேலும், மார்ச் 2024 இல், 37 லட்சம் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA), அங்கன்வாடி பணியாளர்கள் (AWW), அங்கன்வாடி உதவியாளர்கள் (AWH) மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சேர்க்க தகுதி அளவுகோல்கள் விரிவுபடுத்தப்பட்டன.
சமீபத்தில், இந்தத் திட்டம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 6 கோடி மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், வயவந்தனா அட்டை மூலம், 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த ஆயுஷ்மான் அட்டைகளின் விவரங்கள் பின்வருமாறு: ஆஷா 10.45 லட்சம், அங்கன்வாடி பணியாளர்கள் 15.01 லட்சம், அங்கன்வாடி உதவியாளர்கள் 15.05 லட்சம், நாடு முழுவதும் மொத்தம் 31,466 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் 14,194 தனியார் மருத்துவமனைகள். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 9.84 கோடிக்கும் அதிகமான மருத்துவமனை சேர்க்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.