பாமக, பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இருக்காது..!! – திருமாவளவன் திட்டவட்டம்

thirumavalavan 1

2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் விசிக தேர்தல் செலவை அதிமுக ஏற்கும் என இபிஎஸ் கூறியதாக அவர் சொன்னதாகவும், இதற்கு திருமாவளவன் பதிலளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி குறித்து பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், 2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என்றார். அதிமுகவோடு சேர்வீர்களா என்றால் சேரலாம். பிரச்சினை இல்லை. ஆனால் அதிமுக பாஜகவோடு இருப்பதால் அது முடியாது. மிரட்டி அரசியல் செய்யும் தேவை, விசிகவுக்கு இல்லை என பேசினார்.

குறைவான தொகுதி அளித்தாலும் திமுக உடன் விசிக இருக்கும் என்ற கருத்தால் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தவெக கட்சியுடன் விசிக கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை என்று தெளிவுபடுத்திய விசிக தலைவர் திருமாவளவன், அதன்பிறகு பல மேடைகளில் விஜயின் அரசியல் குறித்து கடுமையாகவே விமர்சித்து வருகிறார்.

Read more: சினிமா விமர்சனங்களை தடை செய்ய முடியாது..!! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Next Post

இந்தியா உடன் மிகப்பெரிய டீல் இருக்காம்.. ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்.. என்னவா இருக்கும்?

Fri Jun 27 , 2025
US President Donald Trump has hinted that a major trade deal with India could be signed soon.
17395020761064972 aptopix trump modi 75176 1

You May Like