வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்…!

கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கீழ்க்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்: உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ். இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக் கூடாது அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும். நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை விட்டு செல்ல வேண்டாம். இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள். குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

Dhoni: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!... வைரலாகும் தல தோனியின் வீடியோ!...

Wed Mar 27 , 2024
Dhoni: நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் விஜய் சங்கரின் விக்கெட்டை தனது சிக்னேச்சர் விக்கெட் கீப்பிங் கேட்ச் மூலம் தோனி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை […]

You May Like