வேலை எப்ப வேணாலும் கிடைக்கும்… அதுக்காக குழந்தையை தள்ளிபோடாதீங்க! நடிகை ஜூலி உருக்கம்!

தனக்கு 2 முறை அபார்ஷன் ஆனதாகவும், தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருப்பதாகவும்  நடிகை ஜூலி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜூலி. இவருடைய உண்மையான பெயர் விசாலாட்சி. ஆனால், ஜூலி என்றால் தான் எல்லோருக்குமே தெரியும். இவர் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம், தான் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்திருந்தது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், நடிகை ஜூலி பல தொடர்களில் நடித்து இருக்கிறார். சத்யா, சத்யா சித்திரம் பேசுதடி என்ற சீரியல்களில் நடித்து இருந்தார் ஜூலி. மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸ் வரும் ஆவார்.

இந்த நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். “இந்த குழந்தை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, திருமணமாகி பத்து வருஷம் ஆகிடுச்சு. முதலில் கர்ப்பமானேன். அது அபார்ட் ஆகிடுச்சு. ரெண்டாவது கர்ப்பமானேன். அப்ப கர்ப்பப்பை டியூப்ல பேபி ஃபார்ம் ஆனதால அபார்ட் பண்ண வேண்டியதாகிடுச்சு. 3வது முறை டெஸ்ட் கொடுத்துட்டு ரிசல்ட் வர்ற வரைக்குமே நாங்க ரெண்டு பேரும் பயந்துட்டே தான் இருந்தோம். கன்ஃபார்ம் பண்ணினதும் மருத்துவமனையிலேயே அழுதுட்டேன். ஏன்னா சிலர் வயசாகிடுச்சு இதுக்கு மேல எப்படின்னு சொன்னாங்க.

எனக்கு என் கணவரை சந்தோஷப்படுத்தணும். இவருடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குழந்தையோட இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்குறப்ப, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்களுக்கு ட்ரீட்மென்ட் மூலமாகத்தான் இப்ப குழந்தை பிறக்கப் போகுது என்றார். அதனால நான் எல்லோருக்கும் ஒரே ஒரு அட்வைஸ் செல்லுவேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள், வேலை எப்ப வேணாலும் கிடைக்கும், அதுக்காக எல்லாம் குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க என்று ஜூலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

shyamala

Next Post

லியோ படம் பார்த்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்: இன்ஸ்டா பதிவால் குஷியான ரசிகர்கள்!

Sat Apr 27 , 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்துள்ளதை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது […]

You May Like