#TnGovt: வேலை இல்லாத நபர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! நீங்களும் பெறலாம்…! முழு விவரம் இதோ…

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

உங்கள் கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. SC/ST பிரிவினர் 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப் பட்டம்‌ பெற்றவர்கள் இதனை பெற முடியாது.

இதற்கு நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். எனவே வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாதம் தோறும் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெறலாம்.

Vignesh

Next Post

தொப்பையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் வாங்க!!

Sun Oct 30 , 2022
நம்  உடலின்  நடுப்பகுதியில்  அதிக கொழுப்பு  தேங்கி  இருப்பது  சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் கூறியுள்ளனர். அதிக உள்ளுறுப்பு கொழுப்பு உள்ளவர்களுக்கு இது குறிப்பாக பொருந்தும். இது தோல் கொழுப்பைப் போலன்றி, தோலுக்கு அடியில் இருக்கும் ஜிக்லி வகை, தொப்பை கொழுப்பு வயிற்று குழிக்குள் ஆழமாக அமைந்து உட்புற உறுப்புகளைச் சுற்றியிருக்கும்.அதிக உடல் எடை,தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்க முறை தான். சத்துள்ள […]

You May Like